ருஹுணு பல்கலைக்கழக சுற்றுச் சூழலை பல்கலைக்கழக நகரமாக மாற்றுவதற்கான புதுத் திட்டமொன்று மேற் கொள்ளப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க குறிப்பிடுகிறார். இதற்காக செயற்றிட்டமொன்று பிரேரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி அலங்காரம் செய்யப்பட்டுள்ள முன்பகுதியி லுள்ள பாதையை விசாலமாக்கி, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள கடலில் ஆய்வுப் படகுகள் நிறுத்தும் வண்ணம் துறைமுகம் ஒன்று நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்ட துணைவேந்தர், இங்கு துறைமுகம் நிர்மாணிக்க முடியுமா? என்று ஆய்வும் நடாத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக புது நகரம் மெதவத்தையிலிருந்து தெவிநுவர தேவாலயம் வரையானது. பல்கலைக்கழக பின்புறம் கும்பல்கமுவ குளம் வரை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தற்போது காட்டுத் தாவரங்களால் நிரம்பியுள்ள கும்பல்கம வாவியை அபிவிருத்தி செய்து, அதன்வழி வருகின்ற ஆறு பல்கலைக்கழகம் வரை பரந்திருக்கின்றது. பல்கலைக்கழகத்தை மதில் அமைத்து முடக்குவதிலும் பார்க்க ஆற்றினால் சூழப்பட்டிருப்பது முக்கியமானது.
கும்பல்கமவிலிருந்து தெவிநுவர குடாவிலிருந்து இரண்டு கிலோமீற்றர் ஆற்றுப்பகுதியில் படகு சேவையொன்றையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்” எனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment