பொலிஸ் வேடமிட்டு பொது மக்களிடம் பணம் கொள்ளையிட்ட நபர்கள் கைது !!
கோடீஸ்வர வர்த்தகர்களின் மகன்கள் இருவரும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பணத்தைக் கொள்ளையிட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு கோடீஸ்வர வர்த்தகரின் மகன் கொள்ளையிடுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் அவரது தாய் அறிந்து கொண்டு அதிர்ச்சியில் உயிரி ழந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவி த்துள்ளார்.
செல்வந்த வர்த்தகர்களை அச்சுறுத்தி பல லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப் பட்டுள்ளது. சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளதுடன், இன்று அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்பட உள்ளனர். சந்தேக நபர்களின் வீடுகளி லிருந்து பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment