Monday, May 5, 2014

பயங்கரவாத சந்தேக நபருக்கு திருட்டுத்தனமாக பணம் அனுப்பியோர் இந்தியாவில் கைது!

நேற்று முன்தினம் பயங்கரவாத சந்தேக நபர் எனக் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹம்மட் ஷாக்கிர் ஹுஸைனுக்கு போலி பணத்தாள்களை வழங்கிய இலங்கையர் ஒருவர் உட்பட இன்னும் இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மெல்டா மற்றும் மேற்கு வங்காளிலிருந்து இந்த போலி நாணயங்களை எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் டீ நகரில் வசித்துவந்த மொஹமட் சலீம் மற்றும் அசோக் நகரில் வசித்துவந்த 45 வயது மதிக்கத்தக்க சிவபாலன் என்ற இருவரும் உள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 2.5 இலட்சம் ரூபா போலி நாணயத் தாள்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சலீம் என்பவர் இதற்கு முன்னரும் திருட்டுப் பணம் சார்பில் கைது செய்ப்பட்டவராவார். இலங்கைச் சந்தேக நபர் போதைவஸ்துப் பாவனையாளர்களுக்கு உதவுவபவராகவும் இருந்திருக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளது.

பாகிஸ்தான் இரகசிய உளவுப் பிரிவுடன் (ஐஎஸ்ஐ) தொடர்புடையவர் எனக் கருதப்படுகின்ற ஹுஸைன் எனப்படுபவர் தென் இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலயம், ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றைத் தாக்குவதற்கு செயற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் இந்தியச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறித்த நபர், அமெரிக்க கவுன்சில் காரியாலயம், பெங்களுரில் அமைந்துள்ள இஸ்ரவேல் கவுன்சில் காரியாலயம் உட்பட மற்றும் பல வெளிநாட்டு முகவர் நிலையங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அதேபோல, அந்நாட்டிலுள்ள பாகிஸ்தானிய இராஜதந்திர முகவர் அமீர் சுபார் சித்தீக்கின் கட்டளைக்கேற்ப, தாக்குதல் நடாத்தவுள்ள இடங்களின் வரைபடமொன்றையும் ஹுஸைன் தன்வசம் வைத்திருந்த்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com