அரசாங்கத்துக்கெதிரான ஐ.தே.க.யின் பிரேரணையானது அரசியல் இலாபத்தை நோக்கமாக கொண்டது! ஹக்கீம்
அரசாங்கத்துக்கெதிரான ஐக்கிய தேசிய கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் இலாபத்தை நோக்கமாக கொண்டது என ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறிய அமைச்சர் ஹக்கீம் எமது ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சி நினைத்தால் அது அவர்களது அறியாமையை காட்டுவதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைபொருள் தடுப்பு தொடர்பாக அரசாங்கம் நன்கு செயல்படுவதை சிறையில் அடைத்து வைத்திருப்போரின் தொகை மூலமே தெரிந்துக்கொள்ளலாம் என்றும் போதைபொருளுக்கெதிரான தண்டனை பெறுபவரின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் தடுப்புக்காக இலங்கைப்போல வேறு எந்த நாடு கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது ? என அமைச்சர் வாசுதேவநாணயக்காரவும் இங்கு கேள்வி எழுப்பினார்.
0 comments :
Post a Comment