நானும் குமார வெல்கமவும் சேர்ந்து குடும்ப நிறுவனங்கள் இரண்டு உருவாக்கினோம்! - ரோஹித்த
தானும் அமைச்சர் குமார வெல்கமவும் ஒன்றிணைந்து, குடும்ப நிறுவனங்கள் இரண்டைக் கட்டியெழுப்பி உள்ளோம் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“களுத்துறை மாவட்டத்தினுள் நானும் அமைச்சர் வெல்கமவும் ஒன்றிணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தி வருகின்றோம். நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது பற்றி, ஒன்றிணைந்து தேநீர் அருந்துவது பற்றி சிலருக்குப் பார்த்திருக்க முடியவில்லை. அமைச்சர் வெல்கமதான் மாவட்ட தலைவர். நான் பிரதித் தலைவர்.
அவரின் மகன் செனால் மற்றும் எனது சகோதரன் இருவரும் மாகாண சபையில். எங்களது இரு குடும்பங்களும் சேர்ந்துதான் தற்போது ஒன்றாக பணிபுரிகின்றோம்.
சிலர் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைப் பார்த்து ராஜபக்ஷ நிறுவனம் எனச் சொல்கிறார்கள். கடவுளே அந்த நிறுவனம் காரணமாகத்தான் நாங்கள் இன்று சந்தோசமாக வாழ்கின்றோம். அந்த ராஜபக்ஷ நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்ற அதனோடு இணைந்த நிறுவனந்தான் இந்த வெல்கம - அபேகுணவர்த்தன நிறுவனம் என்பது.
எங்கள் திட்டங்கள் பற்றி சரிவர புரிந்துகொள்ளாதாவர்கள் அவ்வாறும் சொல்வார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன்… “அந்த நிறுவனங்கள் இரண்டும்தான் களுத்துறை மாவட்ட அபிவிருத்திக்காகச் செயற்படுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment