பல்கலைக்கழக மாணவி விபத்தில் பலி !!
நீர்கொழும்பு - கண்டி விதியில் அமைந்துள்ள வனவாசல மேம்பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் கொல்லப் பட்டுள்ளார். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட் டார்வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மேம் பாலத்தின் பாதுகாப்பு கம்பி வேலியில் மோதுண்டதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment