எங்களிடம் விளையாட்டுத் துப்பாக்கி இல்லை… நான் என்றும் ஒளிரும் நட்சத்திரமே! - நிமல்
தன்னிடம் விளையாட்டுத் துப்பாக்கி இல்லை எனவும், தான் என்றும் ஒளிரும் நட்சத்திரம் எனவும் குறிப்பிடுகின்றார் அமைச்சர் நிமல் ஸ்ரீபால த சில்வா.
பதுளையில் இடம்பெற்ற விழாவொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“ஹரீன் பிரனாந்து பதுளையில் பச்சைக் கொடி பறக்கிவிட்டு வலம் வருகின்றார். மிக மிக நல்லது. அவர் அவ்வாறு உலாவரும் போது இங்கு வந்து ஒரு சிறிய கேக் துண்டொன்றையும் சாப்பிட்டுச் செல்லுமாறு நான் அவருக்கு அழைப்பு விடுகின்றேன்.
எங்களிடம் போலித் துப்பாக்கிகள் இல்லை. நாங்கள் என்றும் கிராமங்களில் பயணிப்பதால் இவ்வாறான புதுமையான பயணம் மேற்கொள்ளும் தேவை எமக்கில்லை. நாங்கள் ஒரு ஒரு காலப்பகுதியில் மாத்திரம் மின்னும் நட்சத்திரங்கள் அல்ல. நாங்கள் சமூகத்திற்காக என்றும் ஒளிரும் நட்சத்திரங்கள். அதனால் நாங்கள் புதிதாக கிராமங்களுக்கு வந்து போலி உலா செய்ய வேண்டிய தேவை இல்லை. அதனால் ஹரீன் பிரனாந்து உள்ளிட்ட ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதுளைக்கு வந்து, பதுளையில் நடைபெற்றுள்ள அபிவிருத்திகளை நன்கு கண்டு, அவற்றை மனத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு ஆசிர்வதித்துச் செல்லுமாறு அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment