பெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட பஸ் ஆசாமி கைது !!
பெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட ஜா-எல கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் இருந்து கொள்ளை யிடப்பட்ட தங்க நகைகள் சந்தேகநபரால் அடகுக் கடையில் வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 4 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். பெண்களிடம் நண்பராக பழகி, தூக்க மாத்திரையை குளிப்பானத்தில் கலந்து கொடுத்து தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட பஸ் நடத்துனர் ஒருவர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணிடம் அறிமுகத்தை ஏற்படுத்திய நபர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்பு அப்பெண்ணினால் தயாரிக்கப்பட்ட தேனீரில் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கம் ஏற்படுத்தி 229,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மார்ச் மாதம் 24ஆம் திகதி சிலாபம் பகுதியில் நண்பரான பெண் ஒருவரை திரையரங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு குளிர் பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி அப்பெண்ணிடமிருந்து 1,91,000 ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.
இந்த நகைகளே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment