பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் பணம் நகைகளை கொள்ளையடித்த இளைஞன் வெள்ளவத்தையில் கைது!
பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் பணம் நகைகளை கொள்ளையடித்த இளைஞன் வெள்ள வத்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் பல பெண்களை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களி டமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக வாழ்ந்துவந்து இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்தே அவ்விளைஞன் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவை, கிளானி தோட்டத்தைச்சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஷ்வரன் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் குயின்ஸ்பரி, தலவாக்கலை, கண்டி,நுவரெலியா மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளிலேயே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், கொள்ளை குற்றச்சாட்டில் தலவாக்கலை பொலிஸாரினால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment