மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை!
இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அளுத்தமவைச்சேர்ந்த 50 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருர் வெலிப்பென்ன, மீகம என்னுமிடத்தில் வைத்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, தர்கா நகரில் விருந்தொன்றுக்குச் சென்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு திரும்பிக்கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பொலிஸார் மீதான தாக்குதல் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
0 comments :
Post a Comment