விசேட பொலிஸ் பிரிவுக்கும் காவியுடை அணிவிக்கலாமே! - பிரதமர்
மத விவகார பொலிஸ் ஒன்று தேவைப்படுவதாயின், தற்போது உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவிற்கும் காவியுடை அணிவித்திருக்கலாமே என பிரதமர் தி.மு. ஜயரத்ன குறிப்பிடுகிறார்.
வெசக் நினைவு முத்திரை வெளியிடும் நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது -
“புத்தசாசன அமைச்சின் ஓர் அறையில் பொலிஸார் இருந்தார்கள் என்பதற்காக அது மதம்சார் பொலிஸாராக மாட்டாது. அதுவும் சாதாரண பொலிஸ்தான். சாதாரண பொலிஸாருக்கான சீருடை அணிந்துதான் இவ்விடத்தில் பணிபுரிகின்றார்கள். மத விவகார பொலிஸார் எனச் சொல்வதாயின் அவர்களுக்கு காவியுடை அணிவித்திருக்கலாமே. புத்தசாசன அமைச்சினுள் பொலிஸாரை அமர்த்தியது, தேவையானபோது பங்கேற்று விசாரணை நடாத்தி அவசர முடிவு எடுப்பதற்காகவேயாகும். அவர்களுக்கு அவர்களுடைய விசாரணைகளின் அறிக்கைகளை சமர்ப்பிப்பது பொலிஸ்மா அதிபரே” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment