Saturday, May 17, 2014

தான் ஜனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகராகப் போட்டியிடுவது பற்றி இதுவரை முடிவுசெய்யவில்லை! - பொன்சேக்கா

தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவுசெய்யவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

“நான் பொது அபேட்சகராக போட்டியிடுவதாக செய்திகள் வெளிவந்தாலும், அவ்வாறான ஒரு முடிவுக்கு இதுவரை நான் வரவில்லை. அந்தச் செய்தி எவ்வித உண்மையும் ஆராய்ந்து பாராமல் வெளிவந்தவை என்பதும் அது பொதுமக்களை வேண்டுமென்றே திசைதிருப்பச் செய்துள்ளவை என்பதும் குறிப்பிட்டாக வேண்டும்”

எனது கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துவருகின்ற ஒரு அபேட்சகர் பொது அபேட்சகராக போட்டியிட வருவதாயின், அதற்கு ஒத்துழைப்பு நல்க நானும் எனது கட்சி உறுப்பினர்களும் விரும்புவதாயினும் இதுவரை அவ்வாறானதொரு பொது அபேட்சகர் இல்லை. அவ்வாறு முன்வரவுள்ளவர்கள் யார் என்பது பற்றியும் எங்களுக்குத் தெரியாது.

பொது அபேட்சகராகத் தெரிவு செய்யப்படுபவர் அரசியலுடன் தொடர்பு பட்டவராக இருந்தாலும், அவ்வாறு அரசியலுடன் தொடர்புடாதவராக இருந்தாலும் நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன். அதேபோல அரசாங்கமும் முன்வருகின்ற ஜனாதிபதி அபேட்சகரைத் தெரிவு செய்து கொள்ளும்” எனவும் அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com