இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமனம்!
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா வேறு நியமனம் பெற்று செல்லவுள்ளதையடுத்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1980 ம் ஆண்டு கெடட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து கொண்ட பிரசாத் சமரசிங்க 33 வருடங்களாக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் இரண்டு தடவைகள் இராணுவப் பேச்சாளராக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, பாதுகாப்பு அமைச்சு உட்பட இராணுவ தொண்டர் படையணி மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment