உயிருள்ள பாம்பை கடித்து உட்கொண்ட சவூதி அரேபிய சிப்பாய்!! (படங்கள்)
சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர், இராணுவ சாகசக் கண்காட்சியொன்றின்போது உயிருள்ள பாம்பை கடித்துக் உட்கொண்டுள்ளார். சவூதி அரேபிய உள்துறை அமைச்சரான இளவரசர் மொஹமட் பின் நயீப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே மேற்படி சிப்பாய் உயிருள்ள பாம்பை கடித்ததாக அந்நாட்டு பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்சிப்பாய் முதலில் பாம்பின் தலையை முதலில் கடித்துவிட்டு பின்னர் அதன் உடல்பாகத்தை கடிக்க ஆரம்பித்ததாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய இராணுவத்தின் சிறப்புப் படையணியொன்றைச் சேர்ந்த வீரர்கள் இக்கண்காட்சியில் பங்குபற்றினர்.
பல்வேறு சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் இப்படையணியினரின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment