இது எனக்கான சந்தர்ப்பம்! நீதிமன்றில் நம்பிக்கை வந்துவிட்டது! - ஹிருணிக்கா
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது, முல்லேரியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தொழில்சார் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கருத்துரைத்துள்ளார்.
அந்த வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த வேளை, ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது -
“13 ஆவது பிரதிவாதிக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்படாதிருக்குமோ என நான் பயந்தேன். என்றாலும் எங்களுக்குத் தேவையானது நடந்தது. நீதிமன்றம் நீதியானது என்ற நம்பிக்கை எங்களுக்குள் தோன்றியுள்ளது. இரண்டரை வருடங்கள் நாங்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் போதும் போதுமென்றாகியுள்ளது. இது எனது வேளை…. இனி எல்லாம் எங்களுக்குச் சார்பாகவே வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment