Tuesday, May 6, 2014

ஆளும் கட்சிசார் விடங்களை அங்குமிங்கும் சொல்லித் திரிவதை அனுமதிக்க மாட்டோம்! - மகிந்தர்

யாரேனும் ஒருவருக்க அரசாங்கத்தைப் பற்றி ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அங்குமிங்கும் சொல்லித் திரியாது, அமைச்சரவையில் அல்லது ஆளும் கட்சியின் கூட்டங்களில் கலந்தாலோசிக்க முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றின்போது ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டம் அல்லது மந்திரி சபைக் கூட்டங்கள் அவ்வாறா பிரச்சினைகளை ஆய்வதற்காகத்தான் கூடுகின்றது. அவ்வாறன்றி, அங்குமிங்கும் சென்று அரசாங்க செயற்பாடுகள் தெரிவிப்பதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

யாரேனும் ஒருவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் உடன்பாடற்று இருந்தால், அதுபற்றி கருத்துக்களை எழுத்துவடிவில் தெரிவிப்பதற்கும், விரிவாக கலந்தாலோசிப்பதற்கும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், இந்த ஆளும் கட்சிக் கூட்டத்திற்கு, அமைச்சர்களான விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க முதலானோர் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment