இலங்கை தொடர்பிலான ஐ.நா.பிரேரனை எவ்வகையிலும் உதவாது! வாக்கெடுப்பில் பங்குபற்றாத காரணத்தை போட்டுடைத்தது ஜப்பான்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணைக்கான பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜப்பானிய உதவி வெளிவிவகார அமைச்சர் செய்ஜி கிஹாரா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை எந்த வகையில் இலங்கைக்கு உதவும் என்று ஜப்பான் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்திருந்தது. எனினும் இந்த பிரேரணை இலங்கைக்கு உதவாது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்து கொண்டது. இந்த நிலையிலேயே குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் கலந்துக் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment