வீரவன்ச நாடகமாடவில்லை.. ஆளும் கட்சியின் பலவான்கள் நிலத்திற்கு மேலாக… - தேசுமு
தங்களது கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச நாடகம் நடிப்பதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.
“பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களைப் போல, மேற்கத்தேய நாடுகளுக்கு அனைத்தையும் காட்டிக் கொடுத்து நன்மையடைகின்ற பலர்தான் அவர் நாடகமாடுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய முன்னணி அரசாங்கத்திற்கு தற்போது அவர்களுக்கான வரையறை மறந்துபோயுள்ளது. அவர்கள் வேறு நாடகம் ஆடுகின்றார்கள். அவர்களோடு சேர்ந்து அந்த நாடகத்தில் பங்குகொள்ள எங்களுக்கு முடியாது.
அவர்களின் பிழையான ஆட்டத்தைச் சரிசெய்ய பலமுறை நாங்கள் முயன்றோம். என்றாலும் தற்போது அரசாங்கத்தில் பலம்பொருந்தியவரர்கள் பூமிக்கு மேலால் பல அடி உயரத்தில்இருக்கிறார்கள். அவர்கள் நிலத்தில் காலடி வைக்காதபோது, நிலத்திற்கு தேவையான மாற்றுவழியை மக்கள் சக்தியை கொண்டுவருவது எங்கள் கடமையாகும்.
மத்திய தர வகுப்பினர், மகா சங்கத்தினர், மேதைகள், கலைஞர்கள், துறைசார் வல்லுநர்கள் அனைவரும் இப்போது ஒன்றாகச் சொல்கிறார்கள்.. “இதனை விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினால் மட்டுந்தான் செய்ய முடியும்” என்பதாகவும் அவர் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment