சொல்வதைச் செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கொள்கைத் திட்டத்தை உருவாக்கப்போகின்றாராம் சரத்
பொதுமக்களின் பெரும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கேற்ப கோட்பாட்டை முன்வைப்பதற்கு கிடைத்தமை பாரிய சக்தியாகும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார். அக்கட்சியின் ஆயிரம் கோட்பாட்டுத் திட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளும் கொள்கை எங்களிடம் இல்லை. சொல்வதைச் செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கொள்கைத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்களிக்குமாறு கூறுவது எமது நோக்கமாக இருக்கின்றது.
இக்கட்சி தனது எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக நாட்டின் கல்வியியலாளர்கள், கலைஞர்கள், அறிவாளிகள், தொழிலாளர்கள், தொழில் செய்வோர் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்வதற்கே விரும்புகிறேன். விசேடமாக மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதகுருமார்களின் வழிகாட்டிலை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment