Friday, May 16, 2014

பேலியகொட நகரசபை உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் இலங்கையிலிருந்து சென்றுவிட்டார்…!!

நேற்று முன்தினம் களனி டயர் சந்தியில் பேலியகொட நகர சபை உறுப்பினர் சியாமில் சந்தருவனின் கொலை தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்படவிருந்த களனிப் பிரதேச கோடீஸ்வரன் நாட்டை விட்டு சென்றுவிட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசாரணை நடாத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் அறிவிக்கின்றனர்.

குறித்த நகர சபை உறுப்பினரின் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கோடீஸ்வர வியாபாரி கிரேண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள பாதாள உலகைச் சேர்ந்த ஒருவனை தனது வீட்டுக்கு வரவழைத்து தங்குமிட வசதியளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளதாகவும், இராணுவத்திலிருந்து ஓடிச் சென்ற ஒருவனான இந்த பாதாள உலக நபரை தனது வீட்டுக்கு குறித்த வியாபாரி வரவழைத்தார் என்பதை ஆய்வதற்கு விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலை தொடர்பில் நேற்றுவரை பொலிஸார் ஏறத்தாள 20 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் நடாத்தியுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com