Sunday, May 25, 2014

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் மூவர் மலேசியாவில் கைது!

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாலம்பூர், பி.ஜே. கிலாங் எனும் பிரதேசத்தில் வைத்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 15ஆம் திகதி அமைக்கப்பட்ட விசேட பயங்கரவாத குற்றப்பிரிவினரின் மூலமே குறித்த சந்தேக நபர்கள், கிலாங் மற்றும் பெடலிங் ஜெயா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததாகவும், முக்கியமாக தேசிய அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை பரப்புவதற்காக முனைந்துள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியான டான் ஸ்ரீ காலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டிலேயே இவர்கள் இங்கு வந்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்களது இயக்கத்தை இந்த நாட்டினை அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்யவும் முனைந்துள்ளதுடன் இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக நன்கொடைகளையும் சேர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்;கத்தை பிரசாரம் செய்யவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தொழிநுட்ப சாதனங்களும் மற்றும் 24 நாடுகளுக்கு சமனான வெளிநாட்டு பணம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்நாட்டு அதிகாரிகளிடம் இருந்து மறைந்திருப்பதற்காகவே அவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களிடம் உள்ள அடையாள அட்டைகள் சுரண்டப்பட்டுள்ளனவா என்றும் இந்நாட்டில் பயங்கரவாதம் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுத்து சென்றுள்ளனரா என்பது தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்திடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com