அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சியின் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடும்போது, இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கட்சிகளின் நிலைப்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ்வரன் எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராக நிற்பதற்குரிய சகல தகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
நீதிபதியாக இருந்து இன்று முதலமைச்சராக இருப்பவர் , வருங்காலத்தில் "தேச துரோகியாகி சிறையில் இருந்து களி தின்ன இவர்கள் வழி பார்கிறார்கள்" சரத் பொன்சேகாவின் கடந்த களத்தை இவர் ஒருக்கா நினைத்து பார்க்க வேண்டும் , இவர் என்ன இவருடைய அப்பனே வந்தாலும் மகிந்தவை அசைக்க முடியாது.
ReplyDeleteஇப்படியாக, நேர்மையாக, மதிப்போடு வாழும் ஆட்களை பப்பாவில் ஏற்றி விட்டு கள்ள நரி கூட்டம் இலாபம் தேட நினைக்கிறார்கள். இதற்கு எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அசைய மாட்டார். He is great. He knows everything.
ReplyDelete