கணவனுக்கு சீதனம் கொடுக்க வீடுவீடாகச் சென்று தங்கம் திருடிய பெண் கைது!
தனது கணவன் சீதனம் கேட்டுக் கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதால், வீடுகளுக்குச் சென்று தங்க ஆபரணங்கைளக் கொள்ளையிட்டு, அவற்றை ஈடுவைத்து பணம் கொடுத்துவந்த பெண்ணொருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 வயதுடைய இந்தப் பெண், தனியார் பேரூந்து ஒன்றின் நடாத்துனருடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓடிப்போய் திருட்டுத் திருமணம் செய்துகொண்டுள்ளாள்.
பின்னர் அவரது கணவன் அந்தப் பெண்ணிடம் உன் பெற்றோரிடம் சென்று சீதனம் வாங்கி வா என பலமுறை கொடுமைப்படுத்தி வீட்டிலிருந்து துரத்தியதாகவும், பெற்றோருக்கு முகங்கொடுக்க முடியாமையினால் வீடு வீடாகச் சென்று தங்க்க் கொள்ளையில் ஈடுபட்டு, அவற்றை ஈடுவைத்து பண ரீதியான சீதனமாக அந்தப் பெண் கணவனுக்கு வழங்கியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment