இராணுவத்தினரை நினைவுகூரும் மாதம் பிரகடனம்!
இராணுவ வீர்ர்களை நினைவுகூரும் மாதத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
முதலாவது இராணுவக் கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் பின்னர், இராணுவ நினைவுகூரல் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை அது செயற்படுத்தப்படும்.
இம்மாதத்தினுள் இராணுவத்தினரை நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இராணுவச் சேவை அதிகார சபை என்பன தீர்மானித்துள்ளன.
2007 ஆம் ஆண்டு மன்னாரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இலங்கை இராணுவப் படையின் இரண்டாவது கமாண்டோ ரெஜிமேண்ட் கோப்ரல் கே.பீ. செனங்காவின் மகள் நுவன்தியினால் ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டதோடு, இராணுவத்தினரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி செய்யும் அளப்பரிய சேவைகளுக்காக ஜனாதிபதிக்கு சேவைநலன் நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.
சென்ற வருடம் இராணுவக் கொடி விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் பற்றிய அறிக்கை மாகாண ஆளுநர்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதோடு, அந்த வருமானமானது இராணுவ வீர்ர்களின் குடும்பங்களுக்கு நலனோம்பு விடயங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இராணுவச் சேவை அதிகார சபைக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மாகாணங்களில் விநியோகிப்பதற்காக 2014 ஆம் ஆண்டுக்கான இராணுவக் கொடி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆளுநர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இராணுவ மாதத்தை ஆரம்பித்து வைத்து, அதன் முதலாவது செயற்றிட்டமாக , ஜனாதிபதியால் இவ்வாண்டில் உயர் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆளுநர்களும், அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகார சபையின் தலைவர் பத்மா வெத்தேவ, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பெருந்திரளானோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
(கேஎப்) - Vidivu.lk
0 comments :
Post a Comment