அரச தரப்பு ஊவா மாகாண சபை உறுப்பினர் ஐதேகாவுக்கு…
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், தான் நிச்சயமாக ஆளும் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வேன் எனச் சொல்கிறார் ஊவா மாகாண சபை உறுப்பினர் மிகிமல் முனசிங்க.
அதற்கான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்ற அவர், ஆளும் கட்சியின் தூர நோக்கில்லாத செயற்பாடுகள் தனக்கு போதும் போதும் என்றாக்கியுள்ளது எனவும் அதனால் தான் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment