Tuesday, May 6, 2014

சுத்தானந்த முதியோர் சங்கமும் ஐந்து ராசாக்களும் !

வவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் என்ற பெயரில் இருந்தும் முதியோர்களால் மட்டும் இயக்கபடும் சங்கம் தான் சுத்தானந்த இந்து முதியோர் சங்கம் இதன் தலைவராக 25 வருடங்களாக சேனாதிராசா இருக்கிறார். 25 வருடங்களாக தலைவராக இருக்கும் இந்த முதிய இளைஞர் தனக்கு தானே மக்கள் சேவை மாமணி (மாமாமணி )என்ற பட்டத்தையும் சூட்டி கொண்டார். இவரது 4 தம்பிகளான தர்மராசா , தியாகராசா , வில்வராசா , நடராசா ஆகியோர் இந்த சங்கத்தில் உப தலைவர் , செயலாளர் , ஆயுட்கால உறுபினர்களாக உள்ளனர்.

இந்த முதியோர் சங்கத்தில் இளைஞர்கள் யாரும் இணைய முடியாது, அப்படி இணைய போய் விண்ணப்ப படிவம் கேட்டாலும் கொடுக்க மாடார்களாம். துணிந்த ஒரு சில இளைஞர்கள் அதற்கும் சளைக்காமல் போய் சண்டை பிடித்து கேட்டால் விண்ணப்ப படிவம் கொடுத்து விட்டு உறுபினர்காளாக இருக்கும் இருவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்று முடக்கி விடுவாராம் ஆளும் மூத்த ராசாவான சேனாதிராசா.

அது மட்டும் அல்ல அடுத்த நகரசபை தேர்தலில் நான் தான் தலைவர் என்று மார்தட்டுவதுடன் வவுனியா தமிழரசு கட்சி தலைமை பொறுப்பை டேவிட் நாகனாதனிடம் இருந்து தட்டி பறிக்க முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருபவர்.

மேலும் இவரின் ஏற்பாட்டில் தான் தந்தை செல்வா நினைவு தினம் இரு பிரிவாக நடந்தது. தனது உறவினன் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தலைமையில் 9 மணிக்கும் டேவிட்டர் தலைமையில் 9.30 க்கும் நடந்தது.

மேலும் தனதும் , தம்பிகளினதும் வளர்ச்சியில் யாரும் குறுக்க வந்தாலோ , வளர்ந்து வந்தாலோ மண்டபம் தர மாட்டம் என்று சொல்வாராம்.
அதன் ஒரு அங்கம் தான் காசு கட்டி பதிவு செய்த மண்டபத்தை இளைஞர்கள் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் கலையை வளர்க உருவாகிய தமிழ் மா மன்றத்தின் ஆண்டு விழாவுக்கு தம்பி தர்மராசா (அகளங்கன் ) மண்டபம் தர மாட்டன் என்று சொல்லியமை.

எப்படி காசு கட்டி பதிவு செய்த ஒரு பொது மண்டபத்தை தர மாட்டன் என்று சொல்வீர்கள் என கேட்டதுக்கு? இங்க நாங்கள் வைத்தது தான் சட்டம் வெளியில் போங்கள் என்று விரட்டி விட்டனராம் ராசாக்கள்..

குறைந்தது 1 இளைஞர் கூட இல்லாத இந்த சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இளைஞர்களை உள்வாங்க வைப்பது யார் ?

குறுநில மன்னர் போல் இந்த சங்கத்தை ஆளும் சேனாதிராசாவை தட்டி கேட்டபது யார் ?

தங்கள் இஸ்டத்துக்கும் தன் தம்பி தர்மராசா (அகளங்கன் ), தான் தலைமை தாங்க போனாலும் மண்டபத்தை இலவசமாக வழங்கும் இந்த அநியாயத்தை கேட்பது யார் ?

எல்லாத்துக்கும் அறிக்கை விடும் வன்னி பாராளுமன்ற உறுபினர்களே , மாகாணசபை உறுபினர்களே வவுனியா நகருக்குள் நடக்கும் இந்த அநியாயம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

அரசாங்கம் செய்து இருந்தால் உங்கள் கண்ணுக்கு தெரியும்.. தமிழரசு கட்சி உறுப்பினர் சேனாதிராசா செய்தால் உங்கள் கண்ணுக்கு புல படாதா??

கேசவன் வவுனியா

No comments:

Post a Comment