வாய் கிழியக் கத்துபவர்கள் ஸ்ரீசுக வை விட்டுச் சென்றால் கஞ்சுகூட இல்லை…!
எந்தவொரு நபருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு நீங்கிச் செல்ல இயலாது என தாவரவியல் பூங்கா பொழுது போக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் குறிப்பிடுகிறார்.
குருணாகலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலரைச் சந்தித்த வேளையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது -
“எந்தவொரு நபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று செயற்பட முடியாது. நாங்கள் இருக்கும்போது இவர்கள் வெளியே சென்று ஆறு, நான்கு அடிக்கிறார்கள். எங்களிடமிருந்து விலகிச் சென்றால் இவர்களுக்கு கஞ்சு கூட கிடைப்பதில்லை. குறைந்தளவு சிறியதொரு அமைப்பின் தலைமைப் பதவியைக் கூட இவர்களால் பெற முடியாது. அவர்கள் வாயளவில் வீரர்கள் மட்டுமே.
இந்த ஆண்டின் கடைசிப் பகுதியில் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பிரதேச மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் வருகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சரியான பாதையில் பயணிக்கின்ற, செயற்படுகின்ற கட்சி. இது வெறுமையான கட்சி அல்ல.
ஆளும் கட்சிக்கு பல்வேறு கருத்துக்கள் வந்து சேர்கின்றன. கொள்கைத் திட்டம் உள்ளது. இவர்கள் இப்போது வாய் கிழியக் கத்துவதன் காரணம் என்ன தெரியுமா? தேர்தல் வருகின்றதல்லவா? அதுதான். தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காக விதவிதமாய்க் கதை அளக்கின்றார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment