Saturday, May 31, 2014

குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடும் வரை அரசின் எந்த சலுகையையும் ஏற்கப்போவதில்லை பெற்றோர் வலியுறுத்தல்

பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உத்தரப்பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. பதான் மாவட்டம் கத்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயது சிறுமிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குமுறல்களை 15 நிமிடத்திற்கும் மேலாக கேட்ட ராகுல் சிறுமிகள் பலாத்காரம் செய்து தொங்கவிடப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார். சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வலியுறுத்திய அவர்கள் இதற்காக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ள எந்த சலுகையையும் ஏற்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

1 comments :

Anonymous ,  May 31, 2014 at 7:45 PM  

Indian film industry,circumstances lenient justice system,ignorant police force and some of the dirty medias play dirty roles of encouraging the worst criminals.The government has to take steps to wipe
out these dirty rapists.This country is famous for an increase in the number of reported rapes.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com