இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறுமில்லை - பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பா.ஜனதா நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர், வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பூடான் பிரதமர் ஸ்ரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யாமின் ஆகிய சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment