மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு கை தொலைபேசி மூலம் தூசித்த ஆசிரியர் கைது! கல்முனையில் சம்பவம்!
கல்முனை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு கை தொலைபேசி மூலம் தூசித்த ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்ததை அடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியை செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனக்கு ஒவ்வொரு நாளும் எனது கை தொலை பேசிக்கு அநாமோதய அழைப்புக்கள் வந்தன. எனக்கு யார் என்பதை அடையாளம் காண முடியாதிருந்தது. எனக்கு அழைப்பு எடுப்பவர் கூடாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசிக்கொண்டே இருப்பார். எனினும் தொடர்ந்து பேசியதன் காரணத்தினால் ஓரளவு என்னால் இந்தக் குரல் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் என்பதை சந்தேகித்தேன்.
அதன் பிரகாரம் பாடசாலையில் வைத்து அம்மாணவனை அழைத்து நீர் ஏன் எனக்கு தொலைபேசியில் கூடாத வார்த்தைகளால் பேசுகின்றாய் எனக் கேட்டதற்கு குறித்த ஆசிரியர்தான் என்னுடைய கைய்யடக்க தொலை பேசியில் உங்களுக்கு பேச சொன்னார் என தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை குறித்த ஆசிரியை கல்முனை போலீசில் முறைப்பாடு செய்ததை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவருடன் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களின் வாக்கு மூலத்தை அடுத்தே குறித்த ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் படுகின்றார் எனவும் நாளை நீதிமன்றில் ஆசிரியரை ஆஜர்படுதவுள்ளதாகவும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு ஏ.கப்பார் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment