யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தினைச் சூழ்ந்து கொண்ட மக்களினால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதேவேளை பெருமளவு பொதுமக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டு குற்றவாளியை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியதாகவும் பொதுமக்களை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிற்கும் படி பொலிஸ்நிலைய வாயிலில் வைத்து குறித்த சந்தேகநபரை பொதுமக்களுக்கு காட்டிவிட்டு மல்லாகம் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர் மேற்படி சந்தேக நபரினை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது மூன்றுபேரையும் தானே கொலை செய்ததாக தனஞ்சயன் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது கணவனை பிரிந்து தான் தனியாக தனது தயார் வீட்டில் வாழப்போவதாக தர்மிகா அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தர்மிகா பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த சம்பவத்திற்கு தனது கணவரே காரணம் என்றும் தான் உயிரிழந்தால் அதற்கு தனது கணவரே பொறுப்பு என்றும் கூறியுள்ளார். தனது சகோதரியான மதுசாவை தனக்கு திருமணம் செய்து தருமாறு தனது கணவன் வற்புறுத்தினார் என்றும் ஆனால் தாங்கள் அதற்கு இணங்கவில்லை எனவும் தர்மிகா பொலிஸாருக்கு வழங்கிய வாக்மூலத்தில் கூறியுள்ளார்.
மதுசாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சியை சேர்ந்த யசோதரன் என்பவரை திருமணம் செய்து கொடுத்ததாகவும் ஆனால் தனஞ்சயன் மதுசாவை திருணம் செய்து தருமாறு வற்புறுத்தி தொல்லைப் படுத்திய சம்பவங்கள் எதுவும் யசோதரனின் வீட்டாருக்கு தெரியாது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். மதுசா தனது கணவரான யசோதரனுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை அச்சுவேலியில் உள்ள தயாரின் வீட்டுக்கு விருந்துபசாரத்திற்கு சென்றதை அறிந்த தனஞ்சயன் ஞாயிறு அதிகாலை வீட்டுக்குச் சென்று கொலை செய்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ் தேசியத்தை ஆதரிப்போர் என்றால் கொலையும் செய்யலாம் கற்பழிப்பும் செய்யலாம் ஆனால் அவர்களை தண்டிக்க கூடாது என்று சொல்லிக் கொண்டுஒரு கூட்டம் வெளிக்கிட்டுள்ளது.
ReplyDelete