நரேந்திர மோடியும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள்!
இந்தியப் பிரதமாகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது. மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் மத்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாகியுள்ளதால் இலங்கைக்கு அதிக நன்மைகள் ஏற்பட வாப்பு உண்டு.
தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு இருக்காது. இந்தியாவில் வலுவான ஆட்சி நிறுவப்பட வேண்டியது அவசியமானது. அதற்கு துணிவு மிக்க நரேந்திர மோடி மிகப் பொருத்தமானவர் என்றும் அமைச்சர் கூறினார்.
0 comments :
Post a Comment