மலேஷியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல்களை வழங்குக! இந்தியா மலேசியாவிடம் கோரிக்கை!
மலேஷியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை நபர் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இந்தியா தீர்மானித்துள்தது. இந்நபர் குறித்த தவல்களை வழங்குமாறு இந்திய பாதுகாப்பு பிரிவு மலேஷிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்திய தூதுவராலயங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர் மலேஷியாவின் புகிட் அமான் பயங்கரவாத தடுப்புக் பிரிவினர் கடந்த புதன்கிழமை (14) கீபொங்கில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேலும் மூவர் இந்தியாவின் சென்னையில் கைதாகியுள்ளனர். கைதான இலங்கையர் அல்-கைதாவுடன் மறைமுக தொடர்பு கொண்டிருப்பதாகவும், இலங்கை மற்றும் பிற நாடுகளில் தீவிரவாத செயல்களுடன் தொடர்புபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மலேஷியாவில் பதுங்கியிருப்பதாவும், பொலிஸார் இவரை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கண்கானித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவர் போலி கடவுச்சீட்டு மூலம் மலேஷியாவுக்குள் நுழைந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment