அன்று காட்டிக் கொடுத்தவர்களே இன்று ஜேவிபில் இருக்கிறார்கள்!
மக்கள் விடுதலை முன்னணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன.
“1971 ஆம் ஆண்டு பாதையில் இறங்குங்கள்… போரிடுங்கள் என்று இளைஞர்களை உசுப்பேற்றி பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலியெடுத்தது. 88 - 89 இல் நாட்டையே குட்டிச் சுவராக்கியது. சத்தமிடுங்கள்… போரிடுங்கள் என்று நாட்டையே குழப்பியது. அன்று மாற்றுக் கருத்துக்களுடன் களமிறங்கிய ஜேவிபிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சண்டை செய்வோம்… பாதையில் இறங்குவோம் என விஜித்த ஹேரத் சொல்கிறார். அவர் பாதையில் இறங்கத் தேவையில்லை. அரசாங்கம் இந்நாட்டிலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டுள்ளது. இன்று ஜேவிபி யானைகள் சரணாலயம் போன்றிருக்கின்றது. இன்று அன்று கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களே மீதமாக இருக்கின்றார்கள். 1971 இல் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு ஜேவிபி என்னதான் செய்தது. என்றும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறில்லாமல் அவர்களால் நிலையாக நிற்க முடியாது” என்றும் அமைச்சர் களுத்துறையில் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment