பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா இலங்கையிடம் கற்றுக்கொள்ளவேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. இவ்வாறு பயங்கவராதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும்' என்று சுப்பிரமணியன் சுவாமி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
1 comments :
நல்லா சொன்னீர்கள் சாமி அவர்களே,
இந்தியா மட்டுமல்ல , என்ன தான் நவீன ஆயுதங்கள் இருந்தாலும் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளும் இலங்கையிடம் இருந்து தான் கற்று கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் மரண அடி வாங்கி தோல்வியுடன் ஓடி கொண்ட்டிருகிரார்கள் , அவர்களின் தோல்வி தான் இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்ததை ஏற்று கொள்ள மறுக்க வைகின்றது.
Post a Comment