வலது குறைந்த இராணுவ வீரர் ஒருவரின் கையொன்று தன்னை கையொன்று உராய்ந்ததற்காக, யுவதியொருத்தி தான் காலில் அணிந்திருந்த தனது அடிப்பகுதி உயர்ந்த சப்பாத்தைக் கழற்றி இராணுவ வீரரை நன்றாக அடித்துள்ளார். அதனால் குறித்த நபர் தலையில் பலமாக அடிபட்டு காயத்திற்குள்ளாகியுள்ளார்.
சென்ற 02 ஆம் திகதி மெல்சிரிபுர நகரத்தை ஊடறுத்து குருணாகல் - தம்புல்ல வீதி வழியாக அவ்வீரர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அருகில் தண்ணீர் தேங்கியிருந்த இடத்திலிருந்து பாய்ந்து செல்ல முயன்றபோதே குறித்த யுவதியின் கையில் இராணுவ வீரரின் கை பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த அந்த யுவதி, தான் அணிந்திருந்த உயர்ந்த குதி சப்பாத்தினால் அந்த நபருக்கு சாத்துச் சாத்தியுள்ளார்.
இவ்வாறு காயத்திற்குள்ளாகியிருப்பவர் மெல்சிரிபுரவில் வசிக்கும் 42 வயதுமதிக்கத்தக்க ஒரு இராணுவ வீரராவார். இலங்கை இராணுவப் படையில் 13 வருடங்கள் கடமையாற்றியுள்ள சிரில் அபேரத்ன எனும் பெயருடைய அவர், 1998 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சித்தண்டி இராணுவப் பாசறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது குண்டுத்தாக்குதலுக்குள்ளாகி தற்போது மனோநிலை பாதிப்புக்குள்ளாகியவராகவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இராணுவ வீரர் பற்றிய உண்மையான தகவல்கள் தெரிந்த மெல்சிரிபுர நகர வியாபாரிகள் பலர் அவர் மனநோயாளி எனக் கூறியபோதும், அதனைக் கருத்திற் கொள்ளாது அந்த யுவதி, குறித்த நபரைத் துரத்தித் துரத்தி ஏரத்தாள 10 விநாடிகள் தாக்கியுள்ளார் என குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர். பின்னர் குறித்த நபரின் சகோதர்ர் ஒருவரும் அவ்விடத்திற்கு வந்து குறித்த நபரை கீழே தள்ளி அவரை தாறுமாறாகத் தாக்கிவிட்டு, தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்குள்ளாகி காயங்களிலிருந்த இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த்தைக் கண்டு அவரை கொக்கரெல்ல மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த மாவட்ட வைத்திய அதிகாரி அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது என்று திட்டி விரட்டியதாக குறித்த இராணுவ வீரனின் சொந்தக்கார்ரான ஆர்.டீ.சீ.பீ பிரனாந்து குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் கொக்கரெல்ல மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியர் விஜித்த கலப்பத்தியிடம் விசாரித்தபோது, அவர் அதனை மறுத்துள்ளார். தன்னிடம் வந்த நோயாளிக்குத் தேவையான வைத்திய சேவை வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment