Sunday, May 25, 2014

சொல்வது எதனையும் கேட்கமாட்டேன் என்கிறார் தயாசிரி என குற்றச்சாட்டு!

வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர, தான் சொல்லும் எதனையும் கேட்பதில்லை என வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜே.டீ அலவத்துவல குறிப்பிடுகிறார்.

நாங்கள் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களை சபைக்குக் கொண்டுவந்தோம். நாங்கள் வட மேல் மாகாணத்திற்கு மருத்துவக் கல்லூரி ஒன்று வேண்டும் என்றோம்… வட மேல் மாகாண விவசாயிகளின் ஓய்வூதியத்தை முன்னரைப் போல சரிசெய்யுமாறு சொன்னோம்…புதிதாக சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசியர்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு சொன்னோம்… அதேபோல பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துமாறு சொன்னோம்… அது முதலமைச்சரிடம் சென்றது…

ஆயினும் குறித்த முறைக்கு ஏற்ப அது 75 நாட்களுக்குள் மீண்டும் கூட்டப்பட்ட மாகாண சபைக் கூட்டத்திற்கு வரவில்லை. கலந்தாலோசனை செய்யாமல் எங்கள் பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டன.

நாங்கள் இதுபற்றி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்ததன் பின்னர், முதலமைச்சரும் ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களுக்கு உண்ண, பருகக் கொடுத்திருந்தார். என அலவத்துவல குற்றம் சுமத்துகிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com