லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புடன் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதற்காக அமெரிக்கா ஆவன செய்துவருவதாகத் தெரியவருகின்றது. இதற்கு முன்னர் இதனோடு ஒட்டிய கொள்கையிலிருந்து விலகிச் சென்ற அமெரிக்க இராஜதந்திரி ரிசட் ஹோல் புரூக்கினால், ஆப்கானிஸ்தானுக்குப் பொருத்தமாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தை அப்புறப்படுத்துவதற்காக தலிபான் அமைப்புடன் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு சிரியா பிரச்சினையினுள் பொருத்தமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.
அரசியல் ஆய்வாளர்கள் இதுபற்றிக் குறிப்பிடும்போது, தலிபான் தலைவர் முல்லா முஹம்மதைப் போல ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லா சிரியப் பிரச்சினையை இல்லாதொழிப்பதற்கு மிகவும் தேவையானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறாயினும், நஸ்ருல்லாவின் எதிர்காலம் ஈரானின் கையில் தங்கியுள்ளதுடன் சிரியப் பிரச்சினையினுள்ளும் ஹிஸ்புல்லா அமைப்பு யுத்தம் நடாத்துகின்ற பகுதிகளில் பயன்படுத்துகின்ற ஆயுதங்கள் அனைத்தும் பற்றி தீர்மானிப்பதும் ஈரானே எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் நஸ்ருல்லா வழிகாட்டுவாராயின், அது அமெரிக்காவிற்கு நன்மை பயக்கும் என்பதால் இந்த திட்டத்திற்காக ஆவன செய்யப்படுகின்றது எனத் தெரியவருகின்றது.
தற்போதைக்கு அமெரிக்க சீ.ஐ.ஏ முகவர்கள் ஹிஸ்புல்லா உளவுப் பிரிவினருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
(கேஎப்)
No comments:
Post a Comment