ஜெயலலிதா தலைமையிலான அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்!
நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பங்குகொள்ள மாட்டார் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஜெயலலிதா அரசு ஏற்று அந்த விழாவில பங்கெடுக்க வேண்டும்
அவ்வாறு அதிமுக ஜெயலலிதா அரசு பங்கெடுக்கவில்லை என்றால், ஜெயலலிதா தலைமையிலான அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி, அடுத்த 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தும் யோசனைக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் வலய நாட்டு தலைவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்த பதவியேற்பு விழாவில் பங்குகொள்வதை தமிழக கட்சிகள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
1 comments :
ada pavekala ethu sutha poi pa tamilnadu la ena nadakuthunu tamilnews papra parukapa
Post a Comment