விவேகானந்த மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எஸ். யோகராஜாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! ( படங்கள்)
நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள 15ஆம் கொளனி கமுஃசதுஃவிவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை பாடசாலை அதிபர் எஸ். யோகராஜாவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் வீதியில் பதாதைகளை ஏந்திக் கொண்டு எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 'மாணவர்களுக்கு அறக்களிசறை பட்டம் கொடுத்த அதிபர் வேண்டாம், 12 மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கி கா.பொ.த சாதாரண தரத்தில் பெற்ற பெறுபேறு சிறந்த பெறுபேறா எனக் கேட்ட அதிபர் வேண்டாம், சமுகத்திற்கும் பாடசாலைக்குமான சிறந்த உறவை முன்னெடுக்க வேண்டிய அதிபரே அதனை சீர்குலைக்கின்றார், உறக்கமற்ற ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி, திரு. யோகராசா அதிபரே வெளியேறு, மாணவர்களை முன்னேற்றும் அதிபரே எமக்கு தேவை மாறாக மாணவர்களை பிரிக்கின்ற அதிபர் வேண்டாம், பாடசாலையில் அக்கறை அற்ற அதிபர் வேண்டாம், அதிபரை நிராகரிக்கின்றோம், சுய புத்தி இல்லாத அதிபர் வேண்டாம், சமூகத்தை எதிர்க்கும் அதிபர் வேண்டாம், ஊழலற்ற நிருவாகமே எமக்கு தேவை' போன்ற பதைகளை ஏந்திக் கொண்டு அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலான, எஸ்.புவேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.கலையரசன், சவளக்கடை பொலிஸ் பதில் பெறுப்பதிகாரி ஏ.எல்.சாஹீர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணரெட்டினம், உயர் அதிகரிகள் பலர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை சுமுகமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு பிரதி அதிபராக கடைமையாற்றுகின்ற சம்புநாதன் சாமித்தம்பி அவர்களை தற்கலிகமாக பாடசாலை நடத்துமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு பாடாலை தொடர்ந்து நடை பெற்றது. இதன் பிறகும் நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் பாடசாலை மாணவர்களும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என வலயக்கல்வி பணிப்பாளரிடம் கூறினார்கள்.
0 comments :
Post a Comment