‘அல்லாஹ்” என்று வணங்கினோம் “கடவுளே” எனக்கூறி தூங்கினோம்! - கலீல் மௌலவி
“இந்நாட்டில் அரபி வசந்தம் பற்றிச் சிலர் பேசுகிறார்கள். அப்படியொன்றும் இல்லை. நாங்கள் அரபிகளின் ஒட்டகப் பால் குடித்தவர்கள் அல்ல. இந்நாட்டு பௌத்த தாய்மார்கள்தான் எங்களைப் போசித்திருக்கிறார்கள்” என அகில இலங்கை மார்க்க போதகர் அல்ஹாஜ் கலீல் மௌலவி குறிப்பிடுகிறார்.
தம்புள்ள உயன்வத்த ரஜமகா விகாரையில் இனாமலுவை சுமங்கல தேரருடன் கலந்துறவாடியதன் பின்னர் விசேட அறிக்கைவிடும்போதே மௌலவி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்துள்ள மௌலவி, “இந்நாட்டில் பல மதங்கள் உள்ளன. அவற்றுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்த காலப்பிரிவுகள் உள்ளன. அதனால் அவ்வாறான பிளவுகளை நீக்க மதம்சார் பொலிஸ் பிரிவினை ஏற்படுத்தியிருப்பது சிறப்பானது. முதல் மூன்று முறைப்பாடுகளும் முஸ்லிம்கள் எங்களுக்கு எதிராகவே வந்தன. மதத்தின் பேரால் பல்வேறு பயங்கரவாத அமைப்புக்கள் தோன்றியிருப்பதனால், அவை அனைத்தையும் நீக்குதற் பொருட்டு மதம்சார் பொலிஸ் உருவாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது.” நூற்றுக்கு நூறு முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளிலேயே பூசல்கள் வெடிக்கின்றன. அந்நாட்டவர்களுக்கு அந்நாட்டுப் பிரச்சினைகளைச் சரிவர தீர்க்கமுடியாது. இலங்கை பல்லின சமூகம் வாழ்கின்ற பௌத்த நாடு. தற்போது தோன்றியுள்ள மத சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத பொலிஸ் உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது”
நான் இவ்வேளையில் ஊடகங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அது என்னவென்றால் முஸ்லிம்கள் சமதானத்தை விரும்புகின்ற - ஒருமைப்பாட்டுடன் கூடிய சமூகம். இலாபம் இலாபம் எனச் சொல்லி பொருள் ஈட்டினோம். அல்லாஹ் என்று வணங்கினோம். கடவுளே என்று தூங்கினோம். அவ்வளவுதான். சமுதாயத்திற்கு எப்பிரச்சினையும் எங்களால் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
இந்நாட்டில் அரபி வசந்தம் பற்றிச் சிலர் பேசுகிறார்கள். அப்படியொன்றும் இல்லை. ஆனால் நாம் அரேபிய உடைகளை அணிந்து, அரேபிய கலாச்சாரம், நடத்தைகளை பின்பற்றுகிறோம் அந்த அளவு மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
Post a Comment