Wednesday, May 21, 2014

ஆசிரியரின் மரணம் கொலையா? தற்கொலையா? இந்துக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

கொழும்பு - பம்பலபிட்டி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியரான குளியாப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் மன்னாரை பிறப்பிடமாகவும் கொண்ட பிரான்ஸ் கமிலாஸ் (வயது 37) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்த உடற்பயிற்சி ஆசிரியரே தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என இன்னும் தெரியவரவில்லை. சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இன்று மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. பம்பலபிட்டி பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com