Saturday, May 3, 2014

ஹரீன் பிரனாந்து ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிகொள்ள ஹரீனே சிறந்தவர் என்பது ஐதேகவின் நம்பிக்கை!

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பிரனாந்துவை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டுவிலகி, தேர்தலில் போட்டியிட அவர் தனது விருப்பைத் தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து முதலமைச்சருக்காக போட்டியிடுகின்ற ஷசீந்ர ராஜபக்ஷவுக்கு நல்லதொரு பதிலடி கொடுக்க வல்லவர் ஹரீன் பிரனாந்துவே என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் மேலிட நம்பிக்கையாகும் எனவும் கூறப்படுகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment