Wednesday, May 7, 2014

சட்டவிரோத மது உற்பத்தியையும் விற்பனையும் நிறுத்திடுவீர்! கல்முனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! யு.எம்.இஸ்ஹாக்

கல்முனை தமிழ் பிரதேசங்களில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக கல்முனை பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்து அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் கல்முனை பொலிசாரை கேட்டுள்ளார்.

கல்முனையில் சமீபத்தில் மது ஒழிப்பு ஊர்வலமும் கல்முனை பொலிசாரின் நடமாடும் சேவையும் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் நடை பெற்றது . கல்முனை உதவி போலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் லவநாதன் மேற்கண்டவாறு பேசினார் .

அவர் அங்கு உரையாற்றும் போது மது ஒழிப்பு விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் கல்முனை தமிழ் பிரதேசம் மேலும் பின்தங்கிய நிலைக்கு செல்லும் . பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே மது விற்பனை நிலையங்களை தடை செய்யவும் , சட்ட விரோத விற்பனையை தடை செய்யவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கப்பார் உட்பட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர் .



No comments:

Post a Comment