பால்மாவின் விலையைக் குறைக்குமாறு விமல் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!
பால்மாவின் விலையைக் குறைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சந்தையில் பால்மாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் பயன்களை நுகர்வோர் அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் ஒரு தொன் பால்மாவின் விலை 5200 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. தற்போது ஒரு தொன் பால்மாவின் விலை 3873 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால்மா விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒரு கிலோ பால்மாவின் விலை 152 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.
(கேஎப்)
0 comments :
Post a Comment