ஜெனீவா விகாரையின் அநுசரணையில் வைத்தியசாலை உபரகரணங்கள் அன்பளிப்பு!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா சர்வதேச பௌத்த விகாரையின் அநுசரணையுடன் இலங்கையில் இயங்குகின்ற மாவனானே ஸ்ரீ பிரேமானந்த அமைப்பு, காலி கராப்பிட்டி புற்றுநோய் வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்காக சக்கரக் கதிரைகள் இரண்டும், ட்ரெலிகள் இரண்டும் ஹினிதும பெரியாஸ்பத்திரிக்கு இரண்டு சக்கரக் கதிரைகளும் நெப்யுலைசர் கருவியொன்றும் வழங்கியது.
இதற்காக ரூபா 80,000 பணத் தொகையை ஜெனீவா விகாரையின் அங்கத்துவர் வியட்னாம் நாட்டைச் சேர்ந்த திருமதி த்ரோங் என்பவரே வழங்கியுள்ளார்.
மாவானகே ஸ்ரீ பிரேமானந்த அமைப்பின் தலைவர் தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் ஹபரக்கட இந்திர்ரத்ன தேர்ர், காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை நீதிமன்ற சங்கநாயக்கர் ஹபரகட சோரத்த தேர்ர், அநுராதபுரத்தைச் சேர்ந்த எப்பாவல சோரத்த தேர்ர், ஜெனீவா சர்வதேச பௌத்த விகாரையின் விகாராதிபதி கலாநிதி தவலம தம்மிக தேர்ர், கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிரிதுங்க, தாதிமார், பணியாளர்கள், ஹினிதுவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பியுமிக்கா, வைத்தியர் துஷார, ஜானக நிரிஎல்ல உள்ளிட்ட பணிக்குழுவினரில் ஒருபகுதியினர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment