இணையத்தளத் தடைக்கு எதிராக முறைப்படுகிறார் ஸ்ரீலங்கா மிரர் ஆசிரியர்!
ஸ்ரீலங்கா மிரர்' இணையத்தளம் உட்பட பல செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டமை தொடர்பில் 168, கிங்ஸ்லி வீதி, கொழும்பு -8 (பொரளை) இலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் நாளை புதன்கிழமை (21) பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை தொழில்சார் இணையத்தள ஊடகவியலாளர்கள் சங்க அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா மிரர் இணையத்தள ஆசிரியர் கெலும் சீவன்தவினால் முறைப்பாடு ஒன்று செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment