இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக பாரிய கடன்தொகை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி!
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கையின் அபிவிருத்திக்காக மிகக் குறைந்த வட்டி வீதத்தில் பத்து இலட்சத்து 600 அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கிறார்.
இந்தத் தொகையானது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மிகக் குறைந்த வட்டிவீதத்தில் இலங்கைக்கு வழங்கும் பாரிய கடன் தொகையாகும் எனவும் அமைச்சர் அமுனுகம தெரிவிக்கிறார்.
நீர் வழங்கல் செயற்றிட்டம், பாதை அபிவிருத்தி மற்றும் ஏனைய விசேட அடிப்படைத் தேவைகளுக்காக வழங்கப்படும் இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
சென்ற ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடன் தொகை முற்று முழுதாக அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டமை பற்றி உறுதிப்படுத்தப்பட்டமையினாலேயே இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது என வங்கி முகவர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment