Friday, May 2, 2014

ஜேம்ஸ் பெக்கர் வருவாரா இல்லையா? விடை சொல்கிறார் ரவி விஜேரத்ன!

நிகழ்கால நிகழ்வுகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய கோடீஸ்வர வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வருகை தர மாட்டார் எனக் குறிப்பிடுகின்ற ஊடகச் செய்திகளுக்கு இத்திட்டத்தின் இலங்கையின் முக்கிய பங்காளியான பிரபல வர்த்தகர் ரவி விஜேரத்ன பதிலளித்திருக்கின்றார்.

ஜேம்ஸ் பெக்கர் மற்றும் தன்னுடைய மற்றொரு பங்காளியான “த லேக் லெஷர் ஹோல்டிங்க்ஸ் தனியார் நிறுவனம்” மூலம் கொழும்பு டீ.ஆர். மாவத்தையில் திட்டமிட்டுள்ள கூட்டு அபிவிருத்தி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜேம்ஸ் பெக்கர் குறித்த காலத்தில் வருவார் எனவும் அதிலிருந்து விலகிக் கொள்வதற்கான எந்த எண்ணப்பாடும் இல்லை எனவும் ரவி விஜேரத்ன குறிப்பிடுகிறார்.

“இலங்கையிலிருந்து வெளிவருகின்ற ஊடகச் செய்திகளை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறன்றி, எந்தவொரு வேளையிலும் ஜேம்ஸ் பெக்கர் கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்த்த் திட்டத்துடன் தொடர்புடைய சிற்சில விடயங்களை சரிசெய்துகொண்டு நிச்சயமாக இச்செயற்றிட்டத்தில் ஜேம்ஸ் பெக்கர் கலந்துகொள்வார்” எனவும் ரவி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ் அபிவிருத்தித் திட்ட சட்டமூலத்திற்கு ஏற்ப, இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு அரசாங்கம், கஸினோ தொடர்பில் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ரவி விஜேரத்னவிடம் கேட்டபோது, அவ்விடயம் உண்மை எனவும், இனிமேல் புதிதாக அரசாங்கம் கஸினோவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்காது எனவும் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், தற்போதும் இலங்கையில் கஸினோ சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தன்னிடம் கஸினோ அனுமதிப் பத்திரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி விஜேவர்த்தனவின் பங்காளியான “த லேஷர் ஹோல்டிங்ஸ்” கூட்டு அபிவிருத்தி திட்டத்திற்காக அவுஸ்திரேலிய வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கர் 350 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளார்.

கொழும்பு டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் தற்போது அமைந்து வாகன நிறுத்தும் இடத்திலேயே இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சொந்தக்காரனான ஜேம்ஸ் பெக்கருக்கு அவரது தந்தையிடமிருந்து ஊடகம் தொடர்பான வர்த்தகந்தான் கிடைத்தது என்றாலும், அவர் தனது வர்த்தக நடவடிக்கைகளை பல்வேறு துறைகளிலும் பரப்பி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment