பிறக்கும் போதே கைகளை கோர்த்தபடி வெளியேறிய இரட்டை பிறவிகள்- அதிசயம் (படங்கள்)!
தாயின் கர்ப்ப பையில் இருந்து இரட்டை பிறவிகள் கைகளை கோர்த்தபடி வெளியேறி அதிசயம் – திகைப்பில் மருத்துவர்கள் தாயின் கர்ப்ப பையில் இருந்து இரட்டை பிறவிகள் கைகளை கோர்த்தபடி பிறந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் பில் போத் ( 35) மற்றும் சாரா டிஸ்டில்தவெயிட் (32) . இவர்களு க்கு அன்னையர் தினத்தன்று இரட்டை பெண் குழந்தை பிற ந்தது. அதிசயம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை கோர்த்தபடி பிறந்து உள்ளது. குழந்தைகளு க்கு ஜில்லி யன் மற்றும் ஜின்னா என பெயரிட்டு உள்ளனர்.
இது குறித்து சாரா கூறும் போது, இது அன்னையர் தினத்தில் எனக்கு கிடைத்த நல்ல பரிசுப்பொருள் . நான் இதை நம்பவில்லை. மேலும், இது அதிசயமானது இருவரும் கைகோர்த்தபடி பிறந்து உள்ளனர் என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுபோல் குழந்தை பிறப்பிற்கு மோனோம்னியோடிக் (Mono Amniotic) என பெயர். 10 ஆயிரம் கருவுற்றலில் ஏதாவது ஒன்றில் இவ்வாறு ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment